அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகர் அஜித்தின் 25வது படமான ‛அமர்களம்' படத்தில் நாயகியாக நடித்தார் ஷாலினி. படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
அதன்பின்னர், ஷாலினி சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். ஷாலினிக்கு கடந்த 2008ம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‛அனோஷ்கா' என பெயரிட்டனர். இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து அஜித் - ஷாலினி ஜோடிக்கு ‛ஆத்விக்' என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், தற்போது அஜித்- ஷாலினியின் திருமண வாழ்க்கை 25வது ஆண்டில் நுழைந்துள்ளதை கொண்டாடும் விதமாக சென்னையில் உள்ள ரிசார்ட்டில் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கி கொண்டாடினர். அஜித் - ஷாலினி இருவரும் ஜோடியாக கேக் வெட்டி தங்களது 25வது ஆண்டு காதல் திருமண வாழ்க்கையை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அவர்களுக்கு பிடித்த அமர்களம் படத்தில் இடம்பெற்ற 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு' என்ற பாடல் ஒலித்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் அஜித் - ஷாலினி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.