ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
கடந்த 2003ம் ஆண்டு மாதவன், பிரியங்கா இருவரும் ஜோடியாக நடித்த ‛ஜேஜே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா. அப்படத்தை தொடர்ந்து அஜித்துடன் அட்டகாசம், உள்ளம் கேட்குமே போன்ற படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். பின்னர் ஜித்தன், பட்டியல், தம்பி, தகப்பன்சாமி, பொறி, ஓரம் போ ஆகிய படங்களில் வரிசையாக நடித்தாலும், பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்த ‛நான் கடவுள்' படம் நடிகை பூஜாவிற்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது.
2016ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த பிரஜன் டேவிட் வேதகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் தமிழ் சினிமா பக்கம் வராமல் இருக்கும் பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள், இன்னும் பூஜா அதே தோற்றத்தில் இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.