ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' படத்தில் நடிக்க உள்ளார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் 'புறநானூறு' படம் குறித்து அதன் இயக்குனர் சுதா கொங்கரா, சூர்யா இணைந்து ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.
'புறநானூறு' படத்திற்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. இந்தக் கூட்டணி எங்களது மனதிற்கு நெருக்கமானது மற்றும் சிறப்பானது. உங்களுக்காக எங்களது சிறந்ததைக் கொடுக்க வேலை செய்து வருகிறோம். விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளோம்,” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
'கங்குவா' படத்திற்குப் பிறகு 'அயலான்' ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கலாம் எனத் தெரிகிறது. அதற்குப் பிறகுதான் 'புறநானூறு' ஆரம்பமாகும் என்கிறார்கள்.