அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்திலிருந்தே சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பழம்பெரும் நடிகை ரேவதி. தற்போது சின்னத்திரை சீரியல்களில் வயதான பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேவதி, முன்னதாக மெளன ராகம் தொடரில் நடித்திருந்தார். மிக சமீபத்தில் விஜய் டிவியில் ஹிட் அடித்து வரும் சிறகடிக்க ஆசை தொடரிலும் முத்துவின் பாட்டியாக கலக்கி வருகிறார். கிரிக்கெட் ரசிகையான இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை சந்தித்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். தோனியை சந்தித்த ரேவதி பாட்டியின் புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.