'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் |
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பிருத்திவிராஜ் என்கிற பப்லு மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்த்து வந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன் திடீரென ஷீத்தலும் பப்லுவும் பிரிந்துவிட்டனர். அதை உறுதி செய்யும் வகையில் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நீக்கிவிட்டனர். இதுகுறித்து பல்வேறு வதந்திகள் இப்போது வரை பரவி வரும் நிலையில் ஷீத்தல் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், 'என் கடந்த கால வாழ்க்கை குறித்து பலரும் பல்வேறு விதமாக கேட்கிறீர்கள். பலரும் என் சூழ்நிலை பற்றி தெரியாமல் தவறாக புரிந்து கொள்கிறீர்கள். நானும் பப்லுவும் திருமணம் செய்து கொள்ளவில்லை. லிவிங் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்தோம். எங்கள் உறவு நாங்கள் எதிர்பார்த்தது போல் இருக்கவில்லை. அதனால் இருவரும் பிரிந்திருக்கிறோம். இருவரும் சேர்ந்திருந்தது மகிழ்ச்சியான தருணங்கள். ஆனால், இது பிரிவதற்கான நேரம். எங்களின் இந்த முடிவை மதித்து எங்களுக்கான நேரத்தை கொடுங்கள்' என்று கூறியுள்ளார்.