அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பிரியா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், வசந்த் ரவி, அசோக் செல்வன், ஐஸ்வர்ய லெட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன் ஒன்று கண்டேன்'. இப்படம் தியேட்டர்களில் வெளியாகாமல், தனியார் சாட்டிலைட் டிவி ஒன்றில் பிரிமீயர் படமாக வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்தது. இது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. படத்தின் கதாநாயகன்களில் ஒருவரான வசந்த் ரவி இது குறித்து அவரது கண்டனக் கருத்தை பதிவிட்டிருந்தார்.
அவருக்கும் படக்குழுவுக்கும் ஆதரவு தரும் விதத்தில் நடிகர் விஷ்ணு விஷாலும் ஒரு பதிவிட்டுள்ளார். “பொன் ஒன்று கண்டேன் குழுவுடன் குறிப்பாக எனது நண்பர்கள் வசந்த் ரவி, அசோக் செல்வன், பிரியா ஆகியோர் மீது அனுதாபமாக உள்ளது. இந்த நேரத்தில் தலையில் நிறைய கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கும், உணர்ச்சிகரமாகவும் இருக்கும். தயாரிப்பு நிறுவனம் என்ன முடிவு எடுத்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரியாதை தரவும், அனைத்தையும் ஒரே கூரையின் கீழும் எடுத்து வர வேண்டும். சம்பந்தப்பட்ட ஒவ்வொரு படைப்பாளிக்கும் நடப்பது சரியாகிவிடும் என்று நம்புகிறேன். அதைச் சுற்றி படத்தை சரியான விதத்தில் பார்ப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது ஆதரவுக்கு நடிகர் வசந்த் ரவி நன்றி தெரிவித்துள்ளார்.