ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஸ்ரீவாரி பில்ம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் படம் 'காதலே காதலே'. மஹத் ராகவேந்திரா - மீனாட்சி கோவிந்தராஜன் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இயக்குநர் பாரதிராஜா, ஸ்ரீஜா ரவி, விடிவி கணேஷ், ரவீனா ரவி, ராஜ் அய்யப்பா உள்பட பலர் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஆர்.பிரேம்நாத் இயக்கியுள்ளார். தற்போது இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் ரங்கநாதன் கூறியதாவது : 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'ஜோ' மற்றும் நம் இதயங்களை வென்ற மற்ற காதல் படங்களைப் போலவே மனதைக் கவரும் ஒரு மகிழ்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் படமாக 'காதலே காதலே' இருக்கும். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. விரைவில் படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதியை அறிவிப்போம் என்றார்.