Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபல பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் காலமானார்...!!

14 ஏப், 2013 - 15:18 IST
எழுத்தின் அளவு:

தனது இனிமையான குரலால், காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ், சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியை அடுத்த பத்த‌ளபொடி எனும் கிராமத்தில் 1930ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி பனிந்திர சுவாமி-சேஷா கிரியம்மா தம்பதிகளின் மகனாக பிறந்தவர் ஸ்ரீனிவாஸ். பி.காம்., பட்டதாரியான இவர் 1952ம் ஆண்டு இந்தி சினிமாவில் மிஸ்டர் சம்பத் ‌என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தமிழில் ஜாதகம் என்ற படத்தில் இடம்பெற்ற சிந்தனை என் செல்வமே என்ற பாடல் இவருக்கு அறிமுகம். அதன்பிறகு  பாசமலர் படத்தில் வந்த யார் யார் யார் இவர் யாரோ..., பாவ மன்னிப்பில் இடம்பெற்ற "காலங்களில் அவள் வசந்தம்" படப்பாடல் அவரை பிரபலமாக்கியது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட 12 மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடகராக மட்டுமல்லாமல் நிறைய கஸல்களையும் எழுதியுள்ளார். இந்தியில் சில படங்களுக்கு இவரே பாடல் வரிகள் எழுதி பாடவும் செய்துள்ளார். மேலும் மதுவண்டு என்ற புனைப்பெயரில் ஏராளமான கவிதைகளையும் எழுதியுள்ளார்.

தமிழில் காதல் மன்னன் என்று புகழப்படும் ஜெமினி கணேசனுக்கும், கன்னட நடிகர் ராஜ்குமாருக்கும் தான் அநேக பாடல்களை பாடியுள்ளார். இவர்கள் தவிர்த்து சிவாஜி, எம்.ஜி.ஆர்., போன்ற தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களின் படங்களுக்கும் பாடியுள்ளார். பிரபல பின்னணி பாடகர்கள் சுசீலா, ஜானகி, பானுமதி, எல்.ஆர்.ஈஸ்வரி, லதா மங்கேஸ்கர் போன்றவர்களுடன் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சினிமாவில் இவரது கலைச்சேவையை பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து பாராட்டியது.

தனது மயக்கும் இனிமையான குரலால் கோடான கோடி ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீனிவாஸ், சென்னை, சி.ஐ.டி. நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென இன்று(14.04.13) மதியம் 12 மணியளவில் நெஞ்சு வலிப்பதாக கூறினார். பின்னர் வீட்டில் சோபாவில் அமர்ந்து சிறிது ஓய்வெடுத்த நிலையில் 1 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. மறைந்த ஸ்ரீனிவாஸின் உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிசடங்கு நாளை(15.04.13) நடைபெறுகிறது.

மறைந்த பி.பி.ஸ்ரீனிவாஸின் மறைவுக்கு பிரபல திரை பிரபலங்கள் வைரமுத்து, ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி, மாணிக்க விநாயகம் உள்ளிட்ட பலர் தங்களது இரங்‌கலை தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய காலத்தால் அழியாத பாடல்கள் வருமாறு...

01. காலங்களில் அவள் வசந்தம் - பாவமன்னிப்பு

02. பொதிகை மலை உச்சியிலே - திருவிளையாடல்

03. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா - மக்களை பெற்ற மகராசி

04. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் - சுமைதாங்கி

05. மதுரா நகரில் தமிழ் சங்கம் - பார் மகளே பார்

06. தென்னங்கீற்று ஊஞ்சலிலே - பாதை தெரியுது பார்

07. சின்ன சின்ன கண்ணனுக்கு - வாழ்க்கை படகு

08. காத்திருந்‌த கண்களே - மோட்டார் சுந்தரம் பிள்ளை

09. காற்றுவெளியிடை கண்ணம்மா - கப்பலோட்டிய தமிழன்

10. கண்படுமே கண்படுமே - காத்திருந்த கண்கள்

11. ஒரே ‌கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சில் - பனித்திரை

12. நிலவே என்னிடம் நெருங்காதே - ராமு

13. இன்பம் பொங்கும் வெண்ணிலா - வீரபாண்டிய கட்டபொம்மன்

14. கண்ணாலே பேசி பேசி கொல்லாதே - அடுத்த வீட்டு பெண்

15. அழகிய மிதிலை நகரிலே - அன்னை

16. ஆண்டுறொன்று போனால் வயதொன்று போகும் - போலீஸ்காரன் மகள்

17. எந்த ஊர் என்றவனே - காட்டுரோஜா

18. என்னருகே நீ இருந்தால் -  திருடாதே

19. காதல் நிலவே கண்‌மணி ராதா - ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்

20. விஸ்வநாதன் வேலை வேண்டும் - காதலிக்க நேரமில்லை

21. அனுபவம் புதுமை - காதலிக்க நேரமில்லை

22. உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமா - காதலிக்க நேரமில்லை

23. கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா பச்சை விளக்கு

24. கண்ணிரண்டு மெல்ல மெல்ல - ஆண்டவன் கட்டளை

25. இரவு முடிந்துவிடும் - அன்பு கரங்கள்

26. மெய்யேந்தும் விழியாட - பூஜைக்கு வந்த மலர்

27. மயக்கமா கலக்கமா - சுமை தாங்கி

28. நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் - இதயகமலம்

29. நேற்று வரை நீ யாரோ - வாழ்க்கை படகு

30. ஏனோ மனிதன் பிறந்துவிட்டான் - பனித்திரை

31. பார்த்தேன் சிரித்தேன் - வீர அபிமன்யூ

32. உன்னழகை கண்டு கொண்டால் - பூவும் பொட்டும்

33. நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம் மறப்பதில்லை

34. பால் வண்ணம் பருவம் கண்டேன் - பாசம்

35. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நெஞ்சில் ஓர் ஆலயம்

36. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - போலீஸ்காரன் மகள்

37. வாழ்ந்து பார்க்க வேண்டும் - சாந்தி

38. உடல் உயிருக்கு காவல் - மணப்பந்தல்

39. ரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்

40. பொன் ஒன்று கண்டேன் - படித்தால் மட்டும் போதுமா

41. பாட்டெழுதெட்டும் பருவம் - அண்ணாவின் ஆசை

42. ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான் - ஊட்டி வரை உறவு

43. தென்றலே நீ பேசு - கடவுள் அமைத்த மேடை

44. வளர்ந்த கலை மறந்துவிட்டால் - காத்திருந்த கண்கள்

45. யாரோடும் பேசக் கூடாது - ஊட்டி வரை உறவு

46. ஒடிவது போல் இடை இருக்கும் - இதயத்தில் நீ

47. கண்பாடும் பொன் வண்ணமே - சகோத‌ரி

48. இரவின் மடியில் - சரஸா பி.ஏ.

49. எங்கும் துன்பமில்லை - புனர்ஜென்மம்

50. அழகான மலரே - தென்றல் வீசும்

51. இன்ப எல்லை காணும் நேரம் - இவன் அவனே தான்

52. மாலை மயங்கினால் இரவா - இனிக்கும் இளமை

53. அன்பு மனம் - ஆளுக்கொரு வீடு

54. பாடாத பாட்டெல்லாம் பாட - வீர திருமகன்

55. அவள் பறந்து போனாளே - பார் மகளே பார்

56. அத்திக்காய் - பலே பாண்டியா

57. ஆரோடும் மண்ணில் எங்கும் - பழநி

58. நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா - காதலிக்க நேரமில்லை

59. தாமரை கன்னங்கள் தேன்மலர் - எதிர்நீச்சல்

60. தோல்வி நிலை என நினைத்தால் - ஊமை விழிகள்

61. ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - சாரதா

62. மாம்பழத்து வண்டு - சுமைதாங்கி



63.துள்ளித்திரிந்த பெண்- காத்திருந்த கண்கள்


64.பொன் என்பேன் சிறுபூ- போலீஸ்காரன் மகள்


65.பூவறியும் பூங்கொடியே- இதயத்தில் நீ



போன்ற பாடல்கள் மிகப்பிரபலம். கடைசியாக தமிழில், கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில்  "பெண்மானே பேர் உலகின் பெருமானே..." என்ற பாடலை பாடியிருந்தார்.

பி.பி.ஸ்ரீனிவாஸ் இந்த மண்ணு‌லகை விட்டு பிரிந்தாலும் அவர் பாடிச்சென்ற பாடல்கள் காலத்தால் என்றும் அழியாதை என்பது திண்ணம்.


Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

Easwar - Delhi,இந்தியா
16 ஏப், 2013 - 21:37 Report Abuse
Easwar மெலடி என்றாலே பி பி ஸ்ரீநிவாஸ் தான். அவரின் குரல் இனிமை இனி யாருக்கு வரும்.
Rate this:
mathyvalli - Chennai,இந்தியா
16 ஏப், 2013 - 14:12 Report Abuse
mathyvalli ஸ்ரீநிவாஸ் அவர்கள் பாடிய எல்லா சினிமா பாடல்களும் ஹிட் songs . இதில் எந்த பாடலை நம்பர் one என்று சொல்வது? அவரது குரல் போல மென்மையான ஆண் குரல் கிடைப்பது அரிது. இப்படி ஒரு அருமையான பாடகரை இழந்தது தமிழ் சினிமா, இந்தியன் மியூசிக், all ரசிகர்களுக்கும் பெரிய இழப்பு.
Rate this:
Hariganesan Sm - uthamapalayam,இந்தியா
16 ஏப், 2013 - 13:48 Report Abuse
Hariganesan Sm அழகான குரலுக்கு சொந்தமான பறவை பறந்துவிட்டது.. மயக்கமா கலக்கமா.. என்ற பாடலையோ, நிலவே என்னிடம் நெருங்காதே, காலங்களில் அவள் வசந்தம் ... இன்னும் எத்தனை பசுமையான பாடல்களை ஜெமினி போன்றோருக்கு பாடி பாட்டுக்கும் படத்திற்கும் உயிரோட்டம் கொடுத்தவர். யார் மறந்தாலும் திரை உலகம் மட்டுமல்ல அவரது ரசிகர்களும் மறக்கவே மாட்டார்கள்., மறக்கவும் கூடாது..
Rate this:
ulaganathan p - Kochi (Cochin),இந்தியா
16 ஏப், 2013 - 12:20 Report Abuse
ulaganathan p நான் அவரை உட்லண்ட்ஸ் ஹோடேலில்- இடிக்கப்படுவதற்கு முன்- பல முறை பார்த்திருக் கிறேன். அவருடைய சட்டைப் பையில் வித வித மான பேனாக்கள் சொருகி இருந்தது. அவருக்கு கவிதை எழுதுவது ஒரு பொழுது போக்கு. 1977 ஆம் ஆண்டு- நான் சென்னைக் கு வந்திருந்த புதிது. வெஸ்ட் CIT நகர்- இல் அவரது வீடு. கார்- இல் இருந்து இறங்கி வீட்டுக்குள் போக இருந்தார். சாலையில் போய்க் கொண்டிருந்த அவரை நாங்கள் கண்டு விட்டோம். என் நண்பன் கேட்டான், ஆங்கிலத்தில்- " சார், ஆர் யு p b ஸ்ரீனிவாசன்". அவரும், ஆங்கிலத்திலேயே சொன்னார், " Yes , My Boys " என்றார். நினைவு பசுமையாக இருக்கிறது.
Rate this:
mayuri - Vadapalani,இந்தியா
17 ஏப், 2013 - 06:30Report Abuse
mayuriபசுமையான நினைவு....
Rate this:
Dr.G.K.Sellakumar - Gondar,எத்தியோப்பியா
15 ஏப், 2013 - 19:11 Report Abuse
Dr.G.K.Sellakumar ஒரு அருமையான பாடகரை இழந்துவிட்டோம் .. காலத்தால் அழியாத பாடல்களின் குரலுக்கு சொண்டக்கரர் குடும்பத்தாருக்கு என் ஆழ்த்த வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன்..இசை ஞானி இளையராஜாவின் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டுமே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .. "தென்றலே நீ பேசு என் கண்களால் நீபேசு " படம் கடவுள் அமைத்த மேடை
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in