அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5ல் நடுவர்களாக தாங்கள் பங்கேற்கவில்லை என செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் அறிவித்திருந்தனர். அதேசமயம் புதியதோர் நிகழ்ச்சியை தாமுவும், வெங்கடேஷ் பட்டும் இணைந்து செய்யப் போவதாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் வெங்கடேஷ் பட் தாமுவுடன் சேர்ந்து வெளியிட்ட வீடியோ ஒன்றை திடீரென நீக்கியுள்ளார். இதனையடுத்து நெட்டிசன்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக பல்வேறு கோணங்களில் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு தற்போது பதிலடித்த கொடுத்துள்ள வெங்கடேஷ் பட் 'பூனை கண் மூடினால் உலகம் இருண்டு விடுமோ. இணையத்தில் பதிவை நீக்கினால் உறைத்தது மறையுமோ. சொல் தவறினாலும் நட்பு மாறாது' என அழகிய தமிழில் தங்கள் நட்பு உடையவில்லை என விளக்கம் தெரிவித்துள்ளார்.