அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
அரண்மனை நான்காம் பாகம் மற்றும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வரும் தமன்னா தற்போது'ஒடேலா 2' தொடரில் நடிக்கிறார். 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெற்றிக்குப் பிறகு நடிக்கும் தொடர் இது. அந்த சீரிஸில் கதைக்காக தனது காதலர் விஜய் வர்மாவுடன் இவர் காட்டிய தாராள நெருக்கம் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானது. இதனால், பல வெப் சீரிஸ்கள் வாய்ப்பு தமன்னாவுக்கு வருகிறது.
கடந்த 2022-ல் ஓடிடியில் வெளியான க்ரைம் த்ரில்லர் தொடர் 'ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்'. அசோக் தேஜா இயக்கத்தில் உருவான இந்த க்ரைம் த்ரில்லர் கதையை சம்பத் நந்தி எழுதினார். இப்போது அதன் தொடர்ச்சி 'ஒடேலா 2' என்ற பெயரில் உருவாகிறது. இதில் தான் நடிகை தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று வாராணசியில் தொடங்கியது. இந்தத் தொடர் கிராமிய பின்னணியில் உருவாகிறது. ஹிந்தியில் தயாரானாலும் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகிறது.