அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு 'இங்க நான் தான் கிங்கு' என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். சந்தானம் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுத, ஆனந்த் நாராயண் இயக்குகிறார். இமான் இசையமைக்கிறார். நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இதை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிக்கிறார். 2024 கோடை விடுமுறை காலத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் அவர் பேசும் வசனம் 'இங்க நான் தான் கிங்கு'. இதையே இந்த படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.