அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றவர் அங்கு பிசியான நடிகை ஆனார். தற்போது பாலிவுட் படங்கள், வெப் சீரிஸ்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜவான், ஆர்டிகள் 370, தெலுங்கில் வெளியான பாமகலாபம் 2 படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக பிரியாமணி மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் பிரியாமணி 'மெர்சிடைஸ் பென்ஸ் ஜிஎல்சி' என்ற நவீன ரக சொகுசு காரை வாங்கி உள்ளார். இதன் மதிப்பு 75 லட்சம். குடும்பத்தினருடன் ஷோரூமுக்கு சென்று காரை வாங்கிய அவர் தனது மகிழ்ச்சியை அங்கு கேக் வெட்டி கொண்டாடினார். சமீபத்தில் பிரியாமணி ஐதராபாத்தில் வீடு வாங்கியது குறிப்பிடத்தக்கது. பிரியாமணிக்கு பெங்களூரிலும் சொந்த வீடு உள்ளது.