அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இயக்குனர் பாலா சிறு இடைவெளிக்கு பின் இயக்கி உள்ள படம் ‛வணங்கான்'. இதில் முதலில் சூர்யா ஹீரோவாக நடித்து வந்தார். படப்பிடிப்பு நடந்து வந்த சூழலில் கதை பிரச்னையால் இந்த படத்திலிருந்து சூர்யா விலகினார். பின்னர் அருண் விஜய்யை வைத்து இந்த படத்தை ஆரம்பித்தார் பாலா. ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து தற்போது மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில் இதன் டீஸர் இன்று(பிப்., 19) மாலை 5 மணியளவில் வெளியானது. 1:05 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீஸரில் வசனமே இல்லை. பின்னணி இசையும், அருண் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.