''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு சென்னையில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு இசையமைப்பாளர் தினா மற்றும் சபேசன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் அதிகாரி பாலசுப்ரமணியன் முன்னிலையில் நடந்த இத்தேர்தலில் எம்.சி சபேசன் 318 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தினா 248 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
மேலும் செயலாளராக முரளி, பொருளாளராக சந்திரசேகர், துணை தலைவராக மூர்த்தி மற்றும் இணை செயலாளராக பத்மஸ்ரீ பாலேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
ஏற்கனவே இரண்டு முறை தலைவராக இருந்த தினா மூன்றாவது முறையாகவும் போட்டியிட்டார். இவர் மீது முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் இசையமைப்பாளர் இளையராஜாவே நேரடியாக தினாவை போட்டியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஆனால் இதுபற்றிய விளக்கத்தை இளையராஜாவிடம் தெரிவித்துவிட்டேன் என்றார் தினா. தினாவிற்கு கங்கை அமரன், மனோ உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்துள்ளார்.