ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் | காதலியுடன் பொது நிகழ்வில் முதல்முறையாக ரவி மோகன் | 'கைதி 2' படத்திற்குப் பிறகு 'ஹிட் 4'ல் நடிக்க உள்ள கார்த்தி | 'ஆபரேஷன் சிந்தூர்' : டிரேட் மார்க் பதிவுக்கான விண்ணப்ப சர்ச்சை | 'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் |
கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இசை உலகில் மிக நீண்ட பயணம் செய்து இசை ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் பின்னணி பாடகர் கே.ஜே யேசுதாஸ். சமீபகாலமாக அவர் திரை உலகில் இருந்து ஒதுங்கி அமெரிக்காவில் டல்லாஸில் வசிக்கும் தனது மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து இனிமையாக பொழுது போக்கி வருகிறார். இந்த நிலையில் நடிகர் மோகன்லால் ஜேயேதாஸின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் மோகன்லால்.
இந்த சந்திப்புக்கென பிரத்யேக காரணம் என எதுவுமில்லை. தற்போது தான் முதன்முறையாக இயக்கி வரும் பரோஸ் என்கிற படத்தின் இசை பணிகள் ஹாலிவுட்தில் உள்ள சோனி ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதால் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் மோகன்லால். அங்கிருந்து யேசுதாஸ் வசிக்கும் இடம் அருகாமையில் தான் என்பதால் அவரது இடத்திற்கு தேடி சென்று சந்தித்துள்ளார் மோகன்லால்.