கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
கன்னட சினிமாவில் அறிமுகமானவர் ராகினி திவேதி. இடையிடையே மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். 2014ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கிய 'நிமிர்ந்து நில்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தார். அதுதான் அவர் முதலும், கடைசியுமாக நடித்த தமிழ் படம்.
அதன் பிறகு கன்னட சினிமாவில் பிசியாக நடித்தவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தார். இப்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ள அவர் மீண்டும் நடிக்கத் தொடங்கிருக்கிறார்.
10 வருடங்களுக்கு பிறகு அவர் நடிப்பில் உருவான 'இமெயில்' என்ற படம் வருகிற 9ம் தேதி வெளியாகிறது. எஸ்.ஆர் பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து, இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக 'முருகா' அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இவர்கள் தவிர மனோபாலா, லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ , அக்ஷய் ராஜ், ஆரஞ்சு மிட்டாய் பிரபா உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், கன்னடம் என இருமொழிகளிலும் வெளியாகிறது.