Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் கடைசி படம் தமிழ் தயாரிப்பாளருக்கு இல்லையா...!

03 பிப், 2024 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Vijay-last-film-is-not-for-the-Tamil-producer...!

தமிழ் சினிமாவில் தற்போதைய வசூல் நடிகர்களில் முன்னணியில் இருக்கும் விஜய், அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கிவிட்டார். அதனால், அவருடைய அரசியல் பயணம் ஆரம்பமாகிவிட்டது. முழு அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக சினிமாவில் நடிப்பதிலிருந்து முழுமையாக விலகப் போவதாகவும் நேற்று வெளியிட்ட அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் 68வது படமாக வெங்கட் பிரபு இயக்கி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று கூட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள படப்பையில் நடைபெற்றது. இந்தப் படத்தையடுத்து அவரது 69வது படத்துடன் நடிப்பிலிருந்து விலக உள்ளார். இந்த 69வது படத்தை 'ஆர்ஆர்ஆர்' படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளரான டிவிவி தனய்யா தயாரிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதுவரையிலும் தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்து வந்தவர் விஜய். அவருடைய பெரும்பாலான வெற்றிப் படங்களைத் தமிழ்த் தயாரிப்பாளர்கள்தான் தயாரித்துள்ளார்கள். அவ்வப்போது தெலுங்கு தயாரிப்பாளர்களின் தயாரிப்பிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் விஜய் நடிக்க உள்ள அவரது கடைசி படமான 69வது படத்தின் தயாரிப்பாளர் ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் என்பது தமிழ்த் திரையுலகில் ஒரு சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

விஜய்யின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த 'பூவே உனக்காக' படத்தைத் தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது தயாரிப்பில் விஜய் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகர் ஜீவா கூட அது குறித்த தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடித்து வெளிவந்த 'லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, ஜில்லா,' ஆகியவையும் வெற்றிப் படங்கள்தான்.

இந்நிலையில் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்க முடியாமல் போனால் அது சிறந்த நன்றிக் கடனாக இருக்காது. அவரது கடைசி படம் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் இருப்பதே சிறப்பாக இருக்கும் என தமிழ்த் திரையுலகில் பேச்சுகள் வரலாம். தனக்காக பல வெற்றிகளைத் தந்த தயாரிப்பாளரை விஜய் கைவிட மாட்டார் என்று நம்புவோம்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
முதன் முறையாக இரண்டு வேடத்தில் நடிக்கும் சதீஷ்முதன் முறையாக இரண்டு வேடத்தில் ... 'புயலில் ஒரு தோணி' : பவதாரிணி இசை அமைத்த கடைசி பாடலை பாடிய கார்த்திக் ராஜா 'புயலில் ஒரு தோணி' : பவதாரிணி இசை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

04 பிப், 2024 - 12:02 Report Abuse
தமிழ் ஏன், வேற்று மொழி தயாரிப்பாளராக இருந்தால் சம்பளம் வாங்கமாட்டாரா.
Rate this:
Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
04 பிப், 2024 - 10:02 Report Abuse
Velayutharaja Raja Vijay will win
Rate this:
04 பிப், 2024 - 09:02 Report Abuse
Dandanakka Just one of the trick to promote his latest film saying this is the last film. Regarding party, its just missionary push and they are all working behind this waste guy. No quality to be a politician and will be a failure too. Yes ADMK, DMk n NTK votes will get disturbed as most of the pullingo will vote this useless guy
Rate this:
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
04 பிப், 2024 - 06:02 Report Abuse
Agni Kunju கவலைப்பட வேண்டாம் வண்டி திரும்பவும் சினிமா பக்கம் வரும்…
Rate this:
03 பிப், 2024 - 05:02 Report Abuse
A.Tamilselvan ❎CM ஆசை விஜய்க்கு இல்ல☑️ கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே Twitter அரசியல் செய்கிறார்.⭐எம்.ஜி.ஆர், கேப்டன் சேவை செய்யும் எண்ணத்தில்தான் மாநாடு போட்டு மக்கள் முன்னாடி கட்சி பெயரை அறிவித்தார்கள்????????)ஆனா! விஜய் ???????? விஜய் ஒரு வியபாரி????
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in