ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி |
சிவகார்த்திகேயனோடு சினிமாவில் அறிமுகமானவர் காமெடி நடிகர் சதீஷ். நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் சினிமாவுக்கு வந்தார். சிவகார்த்திகேயன் முன்னணி ஹீரோவாகிவிட்ட நிலையில் தற்போது சதீஷ் மெல்ல மெல்ல ஹீரோவாகிக் கொண்டிருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்த நாய் சேகர், கான்ஞ்சுரிங் கண்ணப்பன் படங்கள் வரவேற்பை பெற்றன.
இப்போது அவர் நடித்து வரும் படம் வித்தைக்காரன். லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கி இயக்குகிறார். இதில் சிம்ரன் குப்தா, தாரிணி, ஆனந்த்ராஜ், மதுசூதனன், சுப்ரமணியம் சிவா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். விபிஆர் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு யுவா கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் வெங்கி கூறும்போது “விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் ஒரு பொருளை கொள்ளையடிக்க, 3 குழு திட்டமிடுகிறது. யார் அதை எடுக்கிறார்கள் என்பதுதான் படம். சதீஷ், மேஜிக் நிபுணராக இதில் நடிக்கிறார். காமெடியனாக இதுவரை நடித்த அவர், இதில் சீரியஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். குறிப்பாக முதன்முறையாக இரண்டு வேடங்களில் அவர் நடிக்கிறார். கொள்ளை அடிக்கும் ஒரு கும்பலின் தலைவனாகவும், அந்த கும்பலை பிடிக்க போராடும் அதிகாரியாகவும் நடித்துள்ளார்.
விமான நிலையம் தொடர்பான காட்சிகளை உண்மையான விமான நிலையத்திலும், செட் அமைத்தும் படமாக்கினோம். இந்தப் படம் ரசிகர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தைக் கொடுக்கும். சதீஷிற்கும் திருப்பம் தரும் படமாக இருக்கும். வருகிற 23ம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.