அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழில் இப்போதைய நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் யோகி பாபு. அதேசமயம் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் கதாநாயகனாக நடிக்க, மடோன் அஸ்வின் இயக்கிய 'மண்டேலா' படம் 2021ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படம் 68வது தேசிய விருதுகளில் சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த வசனத்திற்கான விருது என இரண்டு விருதுகளை வென்றது.
அப்படத்தைத் தெலுங்கில் 'மார்ட்டின் லூதர் கிங்' என்ற பெயரில் ரீமேக் செய்து கடந்த வருடம் வெளியிட்டார்கள். தெலுங்கில் இருவிதமான விமர்சனங்களைப் பெற்றது. தமிழில் யோகி பாபு நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் 'ஸ்பூப்' வகைப் படங்களில் நடித்து பிரபலமான சம்பூர்ணேஷ் பாபு நடித்தார்.
நேற்று யோகிபாபுவை சந்தித்த சம்பூர்ணேஷ் பாபு, “மண்டேலா மற்றும் மார்ட்டின் லூதர்கிங்” என்ற வாசகத்துடன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.