யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
2022ம் ஆண்டில் வெளியான படம் 'கட்டா குஸ்தி'. இதில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தனர். செல்ல அய்யாவு இயக்கி இருந்தார், இதில் குஸ்தி விளையாட்டில் சாதிக்க விரும்பும் ஒரு பெண்ணுக்கும், அவளது கணவனுக்கும் இடையிலான பிரச்னையாக காமெடியாக சொன்ன படம்.
தற்போது இந்த படத்தின் டீம் மீண்டும் இணைகிறது. விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணையும், புதிய படம், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11 வது தயாரிப்பாக உருவாகிறது.
இதுகுறித்து விஷ்ணு விஷால் கூறும்போது “மிகப்பெரும் பொருட்செலவில், முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும். ஆரம்ப கட்ட பணிகள், தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்” என்றார்.
விஷ்ணு விஷால், செல்லா அய்யாவு கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும். முன்னதாக ‛கட்டா குஸ்தி' படத்திற்கு முன் இவர்கள் கூட்டணியில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படமும் வெளியாகி இருந்தது.