'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் |
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன., 22ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். விழாவை முடித்துவிட்டு திரும்பிய ரஜினி சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
‛‛ராமர் கோயில் திறந்த பின்னர் அதை பார்த்த முதல் 150 பேர்களில் நானும் ஒருவன் என்பது சந்தோஷமாக உள்ளது. என்னை பொருத்தவரை இது ஆன்மிக நிகழ்வு'' என்றார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் மத அரசியல் நிகழ்வா என்ற கேள்விக்கு.... ‛‛ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எல்லோரின் பார்வையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரின் கருத்து அவர்களின் சொந்த கருத்து. நான் இதை ஆன்மிக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன்'' என்றார்.