77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து | 7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் | மீண்டும் அல்லு அர்ஜுன் உடன் இணையும் ராஷ்மிகா | டான் 3ம் பாகத்தில் இணைந்த கிர்த்தி சனோன்! | தெலுங்கு நடிகருடன் இணையும் பி.எஸ்.மித்ரன்! | பிரபாஸ் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா! | அக்., 31ல் ஒரே பாகமாக வெளியாகும் ‛பாகுபலி : தி எபிக்' |
22வது புனே சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. வருகிற 25ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் தமிழில் தயாராகி உள்ள 'காதல் என்பது பொதுவுடைமை' படம் இன்றும் (19ம் தேதி) வருகிற 21ம் தேதியும் திரையிடப்படுகிறது. ஏற்கெனவே இந்த படம் கோவாவில் நடந்த இந்தியன் பனோரமா திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை லென்ஸ், தலைக்கூத்தல், மஸ்கிடோபிலாசபி படங்களை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார். இதில் லிஜோ மோல், ரோகிணி, மொலேட்டி, வினீத், ராதாகிருஷ்ணன், கலேஷ் ராம் ஆனந்த், அனுஷா மற்றும் தீபா நடித்துள்ளனர்.
ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். லெஸ்பியன் காதல் கதையாக படம் உருவாகி உள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் தியேட்டர்களில் வெளியாகிறது.