யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
இந்த ஆண்டின் 3வது வெள்ளிக்கிழமையான இன்று புதிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இது ஒரு அபூர்வ நிகழ்வாகும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சேப்டர் 1, மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் வெளிவந்தன. நான்குமே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் வசூலின் அடிப்படையில் 'அயலான்' முதலிடத்தில் இருக்கிறது. பண்டிகை கால படங்கள் ஒரு வாரத்தையும் தாண்டி ஓடும் என்பதால் அதற்கு அடுத்த வாரத்தில் படங்கள் எதுவும் வெளிவராது என்பது நடைமுறையில் இயல்பாக உள்ளது. என்றாலும் சில சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகும். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் வெளிவரவில்லை.
இதற்கு காரணம் அயலான், கேப்டன் மில்லர் படங்கள் ஏராளமான தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டது. விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த 'மிஷன் சேப்டர் 1' படத்திற்கே போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று அதன் இயக்குனர் ஏ.எல்.விஜய் பகிரங்கமாகே கூறியிருந்தார். இந்த நிலையில் வெளியாக தயாராக இருந்தும் சில சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காததால் இந்த வாரம் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.
அடுத்த வாரம் சிங்கப்பூர் சலூன், புளூ ஸ்டார், முடக்கறுத்தான், நியதி, த.நா ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.