அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
துணிவு படத்தை அடுத்து மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இப்படத்தில் அவருடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா என பலர் நடித்து வருகிறார்கள். தற்போது 60 முதல் 70 சதவீத படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், இன்னும் ஓரிரு மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடும். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 63வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்.
மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளில் ‛விடாமுயற்சி' படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தையும் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அஜித்தின் 63வது படத்திற்கு ஏற்கனவே அவர் நடித்த வீரம் படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.