போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
நயன்தாராவின் 75வது படமாக ‛அன்னபூரணி' கடந்தாண்டு இறுதியில் திரைக்கு வந்தது. இதில் சமையல்கலை நிபுணராக நயன்தாரா நடித்தார். அவருடன் ஜெய், சத்யராஜ் ஆகியோரும் நடித்தனர். தியேட்டரை விட்டு வெளியேறிய இந்தபடம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.
இந்த படத்தில் ஒரு காட்சியில் பிராமண பெண்ணான நயன்தாராவை இறைச்சி சாப்பிட வைக்க கடவுள் ராமர் கூட இறைச்சி சாப்பிட்டார் என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. மேலும் நயன்தாரா ஒரு அர்ச்சகரின் மகள். ஆனால் அவர் நமாஸ் செய்கிறார் என்றும், இந்து மதத்தின் புனிதங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த படத்தின் இயக்குனர், நயன்தாரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் ஓடிடியில் இருந்தும் இந்தபடம் நீக்கப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெய் ஸ்ரீராம் என்ற வாசகத்துடன் நயன்தாரா வெளியிட்ட அறிக்கை...
எனது நடிப்பில் வெளியான ‛அன்னபூரணி' படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளமாகி உள்ளது. கனத்த இதயத்துடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். அன்னபூரணி படத்தை வெறும் வணிக நோக்கத்தோடு அல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக பார்த்தோம். இந்த படத்தின் வாயிலாக நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தி இருப்பதாக உணர்ந்தோம்.
தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு தியேட்டர்களில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும், எனது குழுவுக்கும் துளியும் இல்லை.
கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்லும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்று தான். அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.