22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
டில்லியை சேர்ந்தவர் நடிகை தேவயானி ஷர்மா. ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். 2021ம் ஆண்டு , 'ரொமான்டிக்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் செகண்ட் ஹீரோயினாக ஆனார். தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பிசியாக இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் “சிம்புவுடன் நடித்தே தீருவேன். அதற்கான வேலைகளை தொடங்கி விட்டேன்” என்று பகிரங்கமாக அறிவித்து பரபரப்பு கிளப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நான் நடித்தாலும் எனக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது. சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் வெளிப்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம்.
வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதுதான். இதற்காக முழு வீச்சில் இறங்கி உள்ளேன், அதற்கான வேலையும் தொடங்கி விட்டது. அதுமட்டுமின்றி மக்கள் நான் பார்க்கும் வேலையை அங்கீகரித்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய வாழ்வின் லட்சியமாகும்” என்கிறார்.