போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன். இவரும் பாடர்கர்தான். 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். விஜய்க்கு நெருக்கமான நண்பரான யுகேந்திரன், அவர் நடித்த படங்களில் உடன் நடித்தார். பூவெல்லாம் உன் வாசம், யூத், பகவதி, மதுர, திருப்பாச்சி உள்பட பல படங்களில் நடித்தார். ஹீரோக்களின் நண்பன், அண்ணன் கேரக்டர்களில் அதிகம் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைந்து விட்டது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த அவர் சில வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் யுகேந்திரன் கதை நாயகனாக நடிக்க 'காழ்' என்ற படம் தயாராகி உள்ளது. இதில் யுகேந்திரனுடன் சித்தார்த் அன்பரசு, மிமி லீயோனார்ட், நித்யா பாலசுப்பிரமணியன் நடித்துள்ளனர். மோகன்ராஜ் வி.ஜே இயக்கி, தயாரித்துள்ளார். அவருடன் இணைந்து செல்வா கதிரேசன், கிருஷிக்கா தயாரித்துள்ளனர். வசந்த் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹெல்வின் கே.எஸ்., சஞ்சய் அரக்கல் இசையமைத்துள்ளனர். வெளிநாட்டுக்கு சென்று வாழும் ஒரு தமிழ் குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளின் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. முழு படமும் ஆஸ்திரேலியாவில் படமாகி உள்ளது.