யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
கன்னட சினிமாவில் இரண்டாவது வரிசையில் இருந்த யஷ், 'கேஜிஎப்' படங்களுக்கு பிறகு பான் இந்தியா நட்சத்திரமாகி விட்டார். அவருக்கு கோடிக் கணக்கில் ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் யஷ் பிறந்த நாளையொட்டி அவரது பேனர் வைக்க முயன்ற சுரங்கி கிராமத்தை சேர்ந்த ரசிகர்கள் 3 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை கேள்விப்பட்டதும், கோவாவில் படப்பிடிப்பில் இருந்த யஷ், சுரங்கி கிராமத்துக்கு சென்றார். அங்கு மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரை பார்த்து கண்ணீர் விட்டு ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் யஷ் கூறும்போது, “இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிடும் என்று கருதித்தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்து கோவாவுக்கு சென்றேன். ஆனாலும் விபத்தில் மூன்று ரசிகர்கள் மரணம் அடைந்தது வேதனையை ஏற்படுத்தியது. மரணம் அடைந்த இளைஞர்கள் குடும்பத்துக்கு ஒரு மகன் பொறுப்பில் இருந்து வாழ்நாள் முழுவதும் தேவையான அனைத்தையும் செய்வேன்.
ரசிகர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள். எங்களைப் பற்றி யோசிக்காதீர்கள். பெற்றோரை பற்றி சிந்தியுங்கள். இனிமேலாவது இதுபோல் கட் அவுட், பேனர் வைப்பதை கைவிடுங்கள். கடந்த வருடமும் எனது பிறந்த நாளில் அசம்பாவிதங்கள் நடந்தன. இதையெல்லாம் பார்க்கும்போது எனது பிறந்த நாள் என்றாலே எனக்கு பயமாக இருக்கிறது'' என்றார்.