2024ன் கடைசி வாரம்… 10 படங்கள் ரிலீஸ் | 'கேம் சேஞ்சர்' படத்திற்கு புதிய சிக்கல் | 'டேபிள் பிராபிட்' பார்த்த விக்ரமின் ‛வீர தீர சூரன்' | தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள் ரத்தாகுமா? | 2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் |
சின்னத்திரை நடிகரான கலக்கப் போவது யாரு பாலா தனது சொந்த வருமானத்தில் பல சமூகப் பணிகளை செய்து மக்களின் நாயகான மாறி வருகிறார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட பொதுமக்களுக்கு செய்கையில் கணக்கு பார்க்கும் நிலையில், தனது வருமானத்தின் பெரும்பகுதியை மக்களுக்காகவே செலவழித்து வரும் பாலா, ஏழை மாணவர்களின் கல்வி, 4 இலவச ஆம்புலன்ஸ், புயலில் பாதித்த மக்களுக்கு நிவாரண தொகை என அடுத்தடுத்து செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டம் கோட்டை கயப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 3 லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து கொடுத்திருக்கிறார். பாலாவின் இந்த செயலை சோஷியல் மீடியாவில் 'இன்னும் எவ்வளவு செய்வீங்க பாலா' என நெகிழ்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர்.