அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
டிக்-டாக் பிரபலமான சசிலயா தற்போது சின்னத்திரை, சினிமா என நடித்து வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் நடித்து கொண்டிருந்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்தே சசிலயா தாக்கப்பட்டது போல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் ஷூட்டிங்கில் சசிலயா நடந்து கொண்டிருந்த போது, சசிலயா தனது சக நடிகைகளுடன் ஒரு சோபாவில் அமர்ந்திருக்கிறார். அப்போது சீரியல் நடிகை ஆர்த்தி ராம் இருக்க இடம் கேட்டபோது சண்டை எழுந்துள்ளது. அப்போது ஆர்த்தி ராம் சீனியர் நிற்க ஜூனியர் இடம் தராமல் உட்காரலாமா? என்று கூறி சசிலயாவை தாக்க பாய்ந்துள்ளார். இதனையடுத்து சக கலைஞர்களும் இயக்குநரும் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்த வீடியோவானது தற்போது வைரலாக பலரும் சசிலயாவுக்கு ஆதரவாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.