அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்து திரைக்கு வந்துள்ள சலார் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து நாக் அஸ்வின் இயக்கும் கல்கி 2898 ஏடி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூமியை காப்பாற்றும் கதாநாயகனாக பிரபாஸ் நடிக்க, தீபிகா படுகோனே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அதோடு அமிதாப்பச்சன் வழிகாட்டியாகவும், கமல்ஹாசன் வில்லனாகவும் நடித்து வருகிறார்கள். வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
கல்கி படம் குறித்து அப்படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் தற்போது ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில், வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். அதாவது, இப்படத்தின் டிரைலர் இன்னும் 92 நாட்களுக்கு பிறகு வெளியாகும் என்று தெரிவித்திருக்கும் அவர், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.