2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் |
'நெப்போட்டிசம்' என்ற வார்த்தை ஹிந்தி நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு மறைந்த போது அதிகம் உச்சரிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களிலும் டிரெண்ட் ஆனது. பாலிவுட்டில் இந்த 'நெப்போட்டிசம்' என்ற “தகுதியில்லாமல் இருந்தாலும் சொந்த பந்தங்கள் உயர்ந்த இடத்தை அடையவது” என்பது பல குடும்பங்களில் இருக்கிறது.
என்னதான் 'நெப்போட்டிசம்' என்று சொன்னாலும் சொந்தத் திறமை இல்லாமல் எந்த சொந்த வாரிசும் சினிமாவில் வெற்றி பெற முடியாது. இதற்கு பாலிவுட் மட்டும் என்ன, டோலிவுட், கோலிவுட் எதுவுமே விதிவிலக்கு கிடையாது.
இருப்பினும் பாலிவுட்டில்தான் அதிகமான வாரிசு நடிகர்கள், நடிகைகள் இருக்கிறார்கள்.சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் அப்படி இருக்கிறார்கள். அவர்கள் சிலர் முன்னணி நட்சத்திரங்களாகவும் உயர்ந்திருக்கிறார்கள்.
அப்படியான வாரிசு நடிகர்களில் அமிதாப் குடும்பத்திலிருந்து ஒருவர் வந்திருக்கிறார். அமிதாப்பின் மகள் ஸ்வேதாவின் மகன் அகஸ்திய நந்தா 'த ஆர்ச்சிஸ்' படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அப்படத்தின் பிரிமியர் காட்சியில் அமிதாப், அபிஷேக், அகஸ்திய நந்தா ஆகியோர் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் அமிதாப் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. அபிஷேக் வசூல் நடிகராக வளராத நிலையில் அகஸ்திய நந்தா அப்படி வளர்வாரா என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.