''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கோவை வந்திருந்த பிரபல நடிகரும், நடன இயக்குனருமான லாரன்ஸ், அளித்த பேட்டி:
கோவை பற்றிய உங்கள் கருத்து?
கோவைக்கு வருவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அடிக்கடி ஈஷா யோகாவுக்கு வருவேன். கோவை மக்கள் எப்பொழுது பேசினாலும், மிகவும் மரியாதையாக 'அண்ணா' என்ற வார்த்தையை, குறிப்பிட்டு பேசும் அன்பே எனக்கு மிகவும் பிடிக்கும்.
சந்திரமுகி 2 படம் குறித்து கூறுங்கள்...
நடிகர் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தை, நான் தியேட்டரில் பார்த்துள்ளேன். தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பது, கடவுள் எனக்கு அளித்த ஆசீர்வாதம். ரஜினியை விட சூப்பராக பண்ண வேண்டும் என, என்றைக்கும் நினைக்கக் கூடாது. நினைத்தாலும் வராது. ரஜினி, ரஜினி தான். எனக்கு அளித்த கதாபாத்திரத்தை பயந்து செய்துள்ளேன்.
பேய் படங்களாக நடிக்கிறீர்களே? பேயை பார்த்துள்ளீர்களா?
நான் கதைகளை மாத்தி, மாத்தி தான் படங்களில் நடிக்கிறேன். ஆனால், உங்கள் கண்களுக்கு பேய் படங்கள் மட்டும் தான் தெரிகிறது. என்னை தினமும் கண்ணாடியில் பார்க்கிறேன்.
வடிவேலுவுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
மாமன்னன், தேவர் மகன் ஆகிய படங்கள் இரண்டிலுமே நடிகர் வடிவேலு மிகச் சீரியசான கதாபாத்திரங்களை எடுத்து நடித்துள்ளார். நடிகர் வடிவேலுவை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்தாலும், நகைச்சுவை நடிகராக பார்க்க வேண்டும் என நினைப்போம்.
புதிய இயக்குனர்கள் இன்று அதிகம் வருகின்றனரே?
இது ஆரோக்கியமான ஒன்றுதான். கொரோனாவுக்கு முன் ஒரு மாதிரி இருந்தது. தற்போது விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் மாற்றி உள்ளார். இதுபோன்று பல்வேறு இயக்குனர்கள் வந்துள்ளனர். புதிதாக பல விஷயங்களை செய்கிறார்கள். கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் திரைக்கதை, ஆக்சன் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். நாமும் அதற்கு தகுந்தாற் போல் மாறிக்கொள்ள வேண்டும்.
வட மாநிலங்களில் உள்ள நடிகர்கள், நம் இயக்குனர்களை தேர்ந்தெடுத்து, படங்கள் செய்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. அட்லி செய்த படம், அங்கு மிகப் பெரிய ஹிட் ஆகியுள்ளது. நம்ம ஆளு இங்கே இருந்து, அங்கே போய் ஜெயிக்கும்போது, மிகப்பெரிய சந்தோஷம் அளிக்கிறது.
சூப்பர் ஸ்டார் பட்டம் பெறுவதில் விருப்பம் உள்ளதா?
அதைப்பற்றி நான் ஒரு கதையையே கூறியுள்ளேன். அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், 'மாங்காய் மரம் தேங்காய் மரம்' என்று நான் ஒரு கதையை சொல்லி இருப்பேன். அதை பாருங்கள்.