Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எதிர்ப்புகளுக்குப் பணிந்தது 'லியோ': டிரைலரில் 'கெட்ட' வார்த்தை நீக்கம்

11 அக், 2023 - 12:12 IST
எழுத்தின் அளவு:
'Leo':-Cuss-word-muted-in-trailer-after-severe-backlash-for-Vijay's-film

விஜய் நடித்து அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள படம் 'லியோ'. இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த டிரைலரில் ஒரு மோசமான கெட்ட வார்த்தையை விஜய் பேசியிருந்தார். டிரைலரில் இடம் பெற்ற அந்த வார்த்தைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. டிவிக்களில் விவாதம் நடத்தும் அளவிற்குச் சென்ற அந்த வார்த்தையை அந்தக் கதாபாத்திரம்தான் பேசுகிறது என சமாளித்தார் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் நேற்றிரவு அந்த வார்த்தையை டிரைலரில் மியூட் செய்துவிட்டார்கள். படத்திற்கான சென்சார் சான்றிதழ் இரண்டு தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. அதில் அந்த கெட்ட வார்த்தையை படத்திலிருந்து நீக்கியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. படத்தில் அந்த வார்த்தை நீக்கப்பட்டதால் டிரைலரிலிருந்தும் நீக்கியிருக்கிறார்கள். இதனால், 'லியோ' டிரைலருக்கு எழுந்த சர்ச்சைக்கு தற்போது முடிவு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, 'நா ரெடிதான்' பாடலுக்கு நடனமாடியதற்கு இன்னும் சம்பளம் தரவில்லை என சில நடனக் கலைஞர்கள் நேற்று தயாரிப்பு நிறுவனத்தை முற்றுகையிட்டனர். ஆனால், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுவிட்டதாக பெப்ஸி சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 'லியோ' படத்தின் தொடர் சர்ச்சையில் தற்போது இந்த சர்ச்சை இருந்து வருகிறது. இதற்கடுத்து என்ன சர்ச்சை எழும் என்று இனிமேல்தான் தெரியும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே நேரத்தில் 2 படங்களாக உருவாகும் ஒரே நபரின் சுயசரிதை ; எதிர்பார்ப்பில் அஜ்மல்ஒரே நேரத்தில் 2 படங்களாக உருவாகும் ... அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் புதிய வெப் தொடர்! அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)