தயாரிப்பாளர் ஆன காரணம் குறித்து பகிர்ந்த சிம்பு | எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு - துல்கர் சல்மான் | பிப்ரவரி 7ம் தேதி ஓடிடியில் 'கேம் சேஞ்ஜர்' | ‛குட் பேட் அக்லி' படத்துக்காக ரீமிக்ஸ் செய்யப்படும் அஜித்தின் சூப்பர் ஹிட் பாடல் | 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த வைபவின் ஆலம்பனா மார்ச் 7ல் ரிலீஸ் | மினுக்கி மினுக்கி பாடலுக்கு அரை மணி நேரத்தில் டியூன் போட்டேன் : ஜி.வி. பிரகாஷ் | பராசக்தி படத்தில் இணையும் மலையாள பட நடிகர் | சிவகார்த்திகேயனை விட்டு விலகி நானி உடன் இணையும் சிபி சக்கரவர்த்தி | கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தே நடிக்கும் 'அக்கா' | நேரடியாக ஓடிடியில் ‛டெஸ்ட்' ரிலீஸாவதாக அறிவிப்பு - டீசர் வெளியானது |
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பரிணீதி சோப்ரா. அவருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தாவுக்கும் உதய்ப்பூரில் நேற்று திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இத்திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பல சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தனது திருமணம் குறித்து புகைப்படங்களுடன் எக்ஸ் தளத்தில், “காலை உணவு மேஜையில் நடந்த முதல் அரட்டையில் இருந்து, எங்கள் இதயங்களுக்குத் தெரிந்தது. இந்த நாளுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன். கடைசியாக திரு மற்றும் திருமதியாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழ்ந்திருக்க முடியாது. நமது பயணம் தொடங்குகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.