Advertisement

சிறப்புச்செய்திகள்

'தி கோட்', விஜய்யின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவு | கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லியோ - அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா?

10 செப், 2023 - 12:50 IST
எழுத்தின் அளவு:
Leo---Is-it-allowed-for-early-morning-shows?

தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு, வெளியாகும் முதல் நாளில் அதிகாலைக் காட்சிகள், நடு இரவுக் காட்சிகள் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த வருடப் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'வாரிசு, துணிவு' ஆகிய படங்களுக்கு அரசு அனுமதி இல்லாமல் அதிகாலைக் காட்சிகளை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதோடு, 'துணிவு' படத்தின் அதிகாலைக் காட்சிக் கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் ஒருவர் லாரி மீதிருந்து கீழே விழுந்து அகால மரணமடைந்தார். அந்த மரணம் கடும் சோகத்தை ஏற்படுத்தியதோடு சர்ச்சைகளையும் உருவாக்கியது. இப்படி அதிகாலைக் காட்சிகள் நடத்துவதால்தான் தேவையற்ற விபரீதங்கள் நடக்கிறது என சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்தனர்.

அதன்பின் இந்த வருடத்தில் இதுவரையில் எந்த ஒரு படத்திற்கும் அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. தமிழக அமைச்சராய் இருக்கும் உதயநிதி நடித்து வெளிவந்த 'மாமன்னன்' படத்திற்கும், ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படத்திற்கும் கூட அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி தரப்படவில்லை.

இதனிடையே, விஜய் நடித்து அடுத்த மாதம் வெளிவர உள்ள 'லியோ' படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என மல்டிபிளக்ஸ் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் சொன்னதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சமூக வலைத்தளங்களிலும் இது குறித்து விஜய் ரசிகர்களை வைத்து பதிவுகளைப் பரப்பி வருகின்றனர்.

உதயநிதி, ரஜினி படங்களுக்கே அனுமதி வழங்காத அரசு, விஜய் படத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இதனால், 'லியோ' படத்திற்கு அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி கிடைக்காது என்றே திரையுலகத்தில் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 68ல் சினேகா.. மறைமுகமாக உறுதிப்படுத்திய வெங்கட் பிரபு!விஜய் 68ல் சினேகா.. மறைமுகமாக ... புதிய கட்டடத்தில் அடுத்த பொதுக்குழு கூட்டம்: தென்னிந்திய நடிகர் சங்கம் நம்பிக்கை புதிய கட்டடத்தில் அடுத்த பொதுக்குழு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)