பிரபல திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் காலமானார் | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் டப்பிங் பணிகளை துவங்கிய தனுஷ் | சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் குறித்த அப்டேட் | கே.ஜி.எப் 2 வெற்றியால் அலட்சியம் - பிரசாந்த் நீல் | குபேரா படத்தின் கதைக்களம் வெளியானது | விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவு : நெகிழ்ச்சியில் மகிழ்திருமேனி | ஹீரோவின் தலையீட்டால் படத்திலிருந்தே வெளியேறிய ஸ்ருதிஹாசன் | சட்டப்படி நடவடிக்கை - அல்லு அர்ஜுன் வெளியிட்ட பதிவு | சன்னி லியோனுக்கு மாதம் 1000 உதவி தொகையா? - மோசடி புள்ளி சிக்கினார் | ஏஜிஎஸ்-ஐ தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸிற்கு படம் இயக்கும் வெங்கட் பிரபு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2019ல் தமிழில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கைதி'. அப்படத்தை ஹிந்தியில் அஜய் தேவகன் அவரே நடித்து இயக்கவும் செய்தார். அப்படம் பத்து நாட்களுக்கு முன்பு வெளிவந்தது.
இந்த பத்து நாட்களில் சுமார் 70 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. முதல் வார இறுதியில் 45 கோடி வரையிலும், இரண்டாவது வார இறுதியில் மேலும் 25 கோடியுடன் மொத்தமாக 70 கோடி வசூலித்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தியில் ரீமேக் செய்யும் போது படத்தை முழு கமர்ஷியல் படமாக மாற்றியிருந்தார் அஜய் தேவகன். சில பல காட்சிகள் நம்ப முடியாத ஆக்ஷன்களுடன் இருந்தது. அப்படிப்பட்ட ஆக்ஷன் காட்சிகளை அஜய் தேவகன் செய்தால் ஹிந்தி ரசிகர்கள் நம்புவார்கள். ஆனால், இந்தப் படத்தில் அது கொஞ்சம் ஓவராகவே இருந்ததாக விமர்சனங்கள் வந்தது.
நரேன் கதாபாத்திரத்தை, பெண் கதாபாத்திரமாக மாற்றி தபுவை நடிக்க வைத்திருந்தார். 'கைதி'யில் கார்த்திக்கு ஜோடி கிடையாது. இந்தப் படத்தில் பிளாஷ்பேக்கில் அஜய் தேவகன் மனைவியாக அமலா பால் நடித்திருந்தார். காவல் நிலையக் காட்சிகளும், லாரியை ஓட்டிக் கொண்டு கதாநாயகன் செல்லும் காட்சிகளும் மட்டுமே ஒரிஜனல் படத்துடன் ஒட்டியிருந்தன.
இந்தப் படம் வெற்றி பெற்றால் இரண்டாவது பாகத்தை எடுக்கலாமென இருந்தார்களாம். 100 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட 'போலா' இதுவரையில் 70 கோடிதான் வசூலித்துள்ளது. எனவே, இரண்டாவது பாகம் வருவது சந்தேகம்தான்.