போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இந்தபடம் தனியாக ரிலீசாகி இருந்தால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் தயாரிப்பாளருக்கு பெரும் லாபம் கிடைத்திருக்கும். ஆனால், துணிவு படத்துடன் வெளிவந்ததால், இரு திரைப்படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதனால் வாரிசு படத்தின் வசூல் குறைந்தது. இருப்பினும் துணிவு படத்தை விட கூடுதல் வசூலித்தது.
இப்போது விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தபடத்தில் விஜய் உடன் திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
இந்நிலையில் அக்டோபர் மாதம் வெளிவரும் லியோ படத்தை தொடர்ந்து அடுத்த இரு வாரங்களில் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகிறதாம். அதேப்போல் ஹிந்தியில் அட்லீயின் ஜவான் திரைப்படமும் அக்டோபர் மாதம் வெளிவருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மீண்டும் கண்டிப்பாக விஜய் படத்தின் வசூல் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.