அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மிமிக்ரி கலைஞரான கோவை குணா அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மிகவும் புகழ்பெற்ற குணா, திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், அவரது இறப்புக்கு காரணம் அவரிடமிருந்த தவறான பழக்க வழக்கங்கள் தான் என சிலர் பேசி வந்தனர்.
இதுகுறித்து கருத்துகூறியுள்ள மதுரை முத்து, 'பண்முக கலைஞர் என்றாலே அது கோவை குணா மட்டும் தான். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தன்னுடன் இருக்கும் கலைஞர்களை போட்டியாக கருதமாட்டார். சிலர் குணாவிற்கு இருந்த கெட்ட பழக்கத்தால் அவர் இறந்துவிட்டார் என்று கூறுகின்றனர். அது ரொம்ப தவறான ஒன்று. அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறதே தவிர, கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை. பல குரல் கலைஞர்கள், பன்முகத் தன்மையில் விளங்கும் கலைஞர்களுக்கு கோவை குணா பெயரில் விருது வழங்க வேண்டும். அதுதான் அந்த விருதுக்கும் பெருமை, வாங்குபவர்களுக்கும் பெருமை. விரைவில் குணாவுக்காக நடைபெறவுள்ள கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில், கோவை குணா பெயரில் விருது வழங்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறோம்' என்று மதுரை முத்து கூறியுள்ளார்.