போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஜனவரியில் இருந்து காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இடையில் சில நாட்கள் மட்டும் சென்னை திரும்பி ஓய்வெடுத்த படக்குழுவினர், தற்போது மீண்டும் காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு லியோ படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டல் பகுதியில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து ஹோட்டலில் தங்கி இருந்த லியோ படக்குழுவினர் அனைவரும் ஹோட்டலை விட்டு அவசர அவசரமாக வெளியே வந்தனர். அப்போது வெளியே வந்தவர்களில் லோகேஷ் கனகராஜ், நடிகை பிரியா ஆனந்த், கதாசிரியரும் இயக்குனருமான ரத்தினகுமார் மற்றும் தயாரிப்பாளர்கள் லலித்குமார், ஜெகதீசன் ஆகியோருடன் நடிகர் கதிரும் உடன் இருந்தார்.
இந்த படத்தில் இதுவரை நடிகர் கதிர் நடிப்பதாக தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது படக்குழுவினருடன் அவர் தங்கி இருப்பது இந்த படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து இந்தப்படத்தில் விஜய்யுடன் கதிர் மீண்டும் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் பிரபல யு-டியூப்பரான இர்பான் எடுத்த வீடியோ மூலமாக நடிகர் கதிர் இந்த படத்தில் நடிக்கும் விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.