மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ் திரை ரசிகர்களின் கனவுக்கன்னியாக சில ஆண்டுகளுக்கு முன்பு திகழ்ந்தவர் காஜல் அகர்வால். திருமணம் என்ற இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் அதே அழகு, ஆர்வத்தோடு! காலங்களில் வசந்தமாய் கண்களால் காதல் பேசும் காஜல் அளித்த பேட்டி...
திருமண வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு
ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு . அன்பான கணவர்.. குழந்தை... நிறைய பொறுப்புணர்வு இப்போ இருக்கு.
எல்லா மொழிகளிலும் நடிச்சிருக்கிங்க. தமிழ் ரசிகர்கள் பற்றி...
என்னொட பெஸ்ட் படங்கள், பிடித்த படங்கள் தமிழில் வந்திருக்கு.. நிறைய புது புது முயற்சிகள் இங்க எடுக்குறாங்க..அருமையான இயக்குனர்கள், நடிகர்கள், ரசிகர்கள் இருக்காங்க.
கோஷ்டி படத்தில் போலீஸ் ரோலில் நடிப்பது பற்றி
போலீஸ் உடை அணிவது பிடிக்கும். இந்த படத்தில் என் ரோல் வித்தியாசமா இருக்கும்.. படம் காமெடியா இருக்கும்
முதலில் கிடைத்த அங்கீகாரம்...
எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் மகதீரா படம். ராஜமவுலி படம் நடித்தது பெரிய அனுபவத்தை கொடுத்தது.. தமிழில் கிடைத்த முதல் வெற்றி நான் மகான் அல்ல படம். அடுத்து மறக்க முடியாதது ஆல் இன் ஆல் அழகுராஜா படம். இரண்டிலும் கார்த்தி கூட நடித்த அனுபவம் அருமை. சூர்யா, கார்த்தி இரண்டு பேருமே நல்ல நடிகர்கள். சூர்யா அதிகம் பேச மாட்டார். கார்த்தி கலகல டைப். விஜய் அதிகமா பேச மாட்டார். வேலையில் கவனமா இருப்பார்
திருமணத்துக்குப் பிறகும் நடிப்பது பற்றி
ரசிகர்களுக்கு தான் நன்றி சொல்லிக்கணும். திருமணத்துக்கு பிறகு நல்ல ரோல் கிடைச்சிருக்கு.
நடிகை காஜல், அம்மா காஜல். எப்படி இருக்கு
ரொம்ப சவால். அதே சமயம் ரொம்ப தியாகம் செய்ய வேண்டி இருக்கும். என் வேலையை திட்டமிட்டு செய்கிறேன். எனக்கு எப்பவுமே சமையல் செய்வது பிடிக்கும். கணவர், குழந்தைக்கு நான் தான் சமைக்கிறேன். குழந்தைக்கு நிறைய சூப், காய்கறிகள் கொடுத்து பழக்கப்படுத்துகிறேன். மொத்தத்தில் நான் மகிழ்ச்சியான அம்மா.
பெண்களுக்கு சொல்ல விரும்புவது
உங்கள் கனவுகளோடு பயணம் செய்யுங்கள், எல்லா விஷயத்திலும் உறுதியாக இருங்கள்.