2024ன் கடைசி வாரம்… 10 படங்கள் ரிலீஸ் | 'கேம் சேஞ்சர்' படத்திற்கு புதிய சிக்கல் | 'டேபிள் பிராபிட்' பார்த்த விக்ரமின் ‛வீர தீர சூரன்' | தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள் ரத்தாகுமா? | 2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் |
விஜய் டிவியில் வருகிற 20ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் 'ஆஹா கல்யாணம்'. வாரம்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடரில் மவுனிகா, அனிதா வெங்கட், விக்ரம்ஸ்ரீ, அக்ஷயா கண்டமுதன், காயத்ரிஸ்ரீ, விபிஷ் அஸ்வந்த், உள்பட பலர் நடிக்கிறார்கள், பிரான்சிஸ் கதிரவன் இயக்குகிறார்.
தன் மூன்று மகள்களுக்கும் பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிற ஒரு தாயின் கதை. அந்த தாயாக மவுனிகா நடிக்கிறார். மவுனிகா ஆசைப்பட்ட மாதிரி அவருடைய மகள்களுக்கு திருமணம் நடக்கிறதா? அவருடைய கனவு நிறைவேறுமா? என்பதுதான் கதையின் கரு.