மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் லியோ. காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் விமானத்தில் சஞ்சய் இறங்கியது, அவரை படக்குழுவினர் வரவேற்றது, பின்னர் பட செட் அருகே உள்ள ஓட்டலில் விஜய், லோகேஷ் உள்ளிட்டோர் வரவேற்று பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவை ரசிகர்கள் வரவேற்று டிரெண்ட் செய்தனர்.
அந்த வீடியோவில் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார். அவரது தலைமுடி பார்க்கவே வித்தியாசமாக உள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் இருக்கும் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.