அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த சாய் காயத்ரி திடீரென அந்த சீரியலை விட்டு விலகியதாக தகவல் வெளியானது. சாய் காயத்ரி விலகியது உண்மையா? என ரசிகர்கள் பலரும் நேரடியாகவே சாய் காயத்ரியின் இன்ஸ்டாகிராமில் கேள்விகள் கேட்டனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சாய் காயத்ரி, 'ஆமாம், நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகிவிட்டேன். ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு இனிமேல் நலமாக இருக்காது. அது எனக்கும் எனது கேரியருக்கும் நல்லதல்ல. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எனது இந்த முடிவுக்கு மரியாதை அளித்த விஜய் டிவிக்கும் நன்றி' என கூறியுள்ளார். இதனையடுத்து மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் வீஜே தீபிகா இணைந்துள்ளார்.