திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை |
தமிழில் பல ஹிட் பாடல்களை பாடி பிரபலமான பென்னி தயாள், அண்மையில் சென்னை விஐடி கல்லூரியில் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். மேடையில் அவர் பாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு பறந்து கொண்டிருந்த ட்ரோன் கேமரா ஒன்று அவரது தலையில் மோதியது. இதனால் வலி தாங்க முடியாமல் பென்னி தயாள் மேடையிலேயே சுருண்டு உட்கார்ந்தார். இதன் வீடியோவானது சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், தனக்கு நடந்த விபத்து குறித்து விளக்கமளித்த பென்னி தயாள், 'ட்ரோனின் இறக்கை தலையின் பின்புறம் தாக்கிய போது தடுக்க முயன்றேன். அப்போது இறக்கை கைவிரல்களில் பட்டு காயம் ஏற்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் புரொபஷ்னல் ட்ரோன் ஆப்ரேட்டர்களை அமர்த்துங்கள். அனைத்து கலைஞர்களும் ஒப்பந்தத்தின் போது ட்ரோன் நமது அருகில் நெருங்க முடியாததை உறுதி செய்ய வேண்டும். நாங்கள் கலைஞர்கள், மேடையில் பாடுகிறோம். இது விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வழக்கமான ஏற்பாடுகளை மட்டும் செய்யுங்கள்' என தெரிவித்துள்ளார்.