பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பிச்சைக்காரன். இந்த நிலையில் தற்போது பிச்சைக்காரன்-2 படத்தை தானே இயக்கி, இசையமைத்து, எடிட்டிங் செய்து நாயகனாகவும் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இப்படத்தில் அவருடன் காவியா தபார், யோகி பாபு, ஜான் விஜய், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
இந்த பிச்சைக்காரன்-2 படத்தின் நான்கு நிமிட காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டபோது, இப்படம் மூளை மாற்று அறுவை சிகிச்சையால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்த கதையில் உருவாகி இருப்பது தெரிய வந்தது. மேலும், பிச்சைக்காரன் முதல் பாகத்தைப்போலவே இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகும் நிலையில், பிச்சைக்காரன்- 2 படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு வர இருப்பதாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.