'கேம் சேஞ்சர்' படத்திற்கு புதிய சிக்கல் | 'டேபிள் பிராபிட்' பார்த்த விக்ரமின் ‛வீர தீர சூரன்' | தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள் ரத்தாகுமா? | 2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் | விஜய் பட விவகாரம்! - வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா | சமரச மையத்தில் ஜெயம் ரவி - ஆர்த்தி! நீதிபதி போட்ட உத்தரவு | மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! |
விஜய் டிவியின் ஹிட் தொடர்களில் ஒன்றான ராஜா ராணி சீசன்2வில் ஆல்யா மானசா விலகியதற்கு பின் ரியா விஸ்வநாத் என்ற நடிகை கடந்த ஒருவருடமாக நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன் திடீரென ராஜா ராணி 2வில் இனி நான் இல்லை என சோகமாக வீடியோ வெளியிட்டு தான் விலகியதை ரசிகர்களிடத்தில் தெரியப்படுத்தினர். தற்போது புது சந்தியாவாக ஆஷா கவுடா நடித்து வருகிறார்.
இந்நிலையில், ரியாவிடம் ரசிகர்கள் சிலர் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணங்களை பலவாறாக கேட்டுள்ளனர். 'திருமணத்தின் காரணமாக விலகினீர்களா?' என ரசிகர் ஒருவர் கேட்க, 'தனக்கு திருமணமாக 2 முதல் 3 வருடம் ஆகுமென்றும் திருமணத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகவில்லை' என்று தெளிபடுத்தியிருந்தார்.
மற்றொரு ரசிகர் 'பிரைம் டைம் சீரியலை விட்டு ஏன் விலகினீர்கள்?' என்று கேட்டிருந்தார். அதற்கு ரியா,'எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது' என்று கூற ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரியாவின் பதில்களிலிருந்து ரியா சீரியலை விட்டு விலகவில்லை, வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்று புரிய வருகிறது. இதனால் ரியாவின் ரசிகர்களில் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.