'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? |
'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரது 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என கடந்த வருடம் மார்ச் மாதம் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், கடந்த ஓரிரு வாரங்களாகவே அப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார் என்ற செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக தனது டுவிட்டர் தளத்திலிருந்து 'எகே 62' என்ற வார்த்தையையும், அஜித் புகைப்படத்தையும் நீக்கினார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் அஜித்தின் 62வது படத்தை மகிழ்திருமேனி இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். விஜய்யின் 67வது படம் பற்றிய ஆரம்பக்கட்ட அப்டேட்டுகள் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தின. அது முடிந்த பின் அஜித் 62 பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என சொன்னார்கள்.
அதனால், இந்த வாரம் எகே 62 பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. விஜய்யின் 'லியோ' பட அறிவிப்பை அதிரடியான டீசருடன் ஆரம்பித்தார்கள். ஆனால், 'எகே 62' பற்றிய அறிவிப்பு ஆர்ப்பாட்டம் இல்லாமல் பத்திரிகைச் செய்தி அறிவிப்பாக மட்டுமே வெளியாகும் என்கிறார்கள்.