'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? |
சின்னத்திரை நடிகை கிருபா, ஹெச் ஆர் வேலையை துறந்து நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே 2' தொடரில் நாயகியின் அம்மாவாக நடித்து வரும் கிருபா அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த சீரியலில் கேப்ரில்லா மற்றும் ஸ்வாதிக்கு என இரண்டு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், அண்மையில் கிருபா வெளியிட்டுள்ள புகைப்படத்தின் கீழ் இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே சண்டை வர ஆரம்பித்தது. ஒருக்கட்டத்தில் இந்த சண்டை அத்துமீறி போகவே, லைவ் வந்த கிருபா 'சீரியலில் மட்டும் தான் எங்களுக்குள் சண்டை மற்றபடி செட்டில் ஒன்றாக தான் இருப்போம். சீரியலை பொழுதுபோக்காக பாருங்கள். நீங்கள் பதிவிட்ட கருத்துகளை நீங்களே டெலிட் செய்துவிடுங்கள். இல்லை என்றால் ப்ளாக் செய்துவிடுவேன்' என்று எச்சரித்துள்ளார்.