அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் மற்றும் பலர் நடிப்பில் ஜனவரி 25ம் தேதி வெளிவந்த படம் 'பதான்'. இப்படம் உலக அளவில் 800 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 500 கோடிக்கு அதிகமாகவும், வெளிநாடுகளில் 300 கோடிக்கு அதிகமாகும் மொத்தத்தில் யுஎஸ் டாலர் மதிப்பில் 100 மில்லியனைக் கடந்துள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சாதனையை 12 நாட்களிலேயே 'பதான்' படைத்துள்ளதாம். 2023ல் உலக அளவில் வெளிவந்த படங்களில் 100 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்த 6வது படமாக 'பதான்' இருக்கிறதாம்.
இந்தியாவில் மட்டும் நிகர வசூல் 430 கோடி என்கிறார்கள். 'பாகுபலி 2' படம் 400 கோடியைக் கடக்க 15 நாட்களையும், 'கேஜிஎப் 2' படம் 23 நாட்களையும் எடுத்துக் கொண்டதாம். அந்த சாதனையை தற்போது 'பதான்' முறியடித்திருக்கிறது.